பிரிட்டன் தேர்தலில் இலங்கைப் பெண்

19.4.15

பிரிட்டனின் முன்னணி அரசியல் வாதியான இலங்கைப் பெண் ஒருவர் எதிர்வரும் மேமாதம் நடை பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகின்றார்.

1979 ஆம் ஆண்டு பிறந்த 36 வயதான சமலி பெர்னாண்டோ, என்பவரே இந்த இலங்கைப் பெண் ஆவார். அவரது தாய் வனிதா பெர்னாண்டோ (தாதி), தந்தை சுமல் பெர்னாண்டோ (சட்டத்தரணி) தற்பொழுது பிரிட்டனில் வாழ்ந்து வரும் சமலி பெர்னாண்டோ, இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில், கன்சர்வேடிவ் கட்சியின் சார்பில், கேம்பிரிட்ஜ் நகரில் வேட்பாளராக போட்டியிடவுள்ளார்.

பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தல் மே மாதம் 7ஆம் திகதி நடைபெறவுள்ளது. சட்டத்தரணியான சமலி பெர்னாண்டோ பிரிட்டனின் பரிஸ்டர் பட்டதாரியும் ஆவர். சட்டத்தரணித் தொழிலுக்கு மேலதிகமாக மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் விஷேட கவனம் செலுத்தும் அவர், மன நோயாளர்களுக்குக் கையுறை ஒன்றையும் அணிவிக்க வேண்டும் எனவும் யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

சமூகத்தில் மன நோயாளர்களுக் குத் தேவையான உபசரிப்புக்கள் கிடைக்கப் பெறவேண்டும் என்ற ஒரு காரணத்தினாலேயே அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார். அதேவேளை அவர் தற் பொழுது பிரிட்டன் அரசியல் மேடைகளில் பேசப்படும் ஒரு பெண்ணாகவும் காணப்படுகிறார்.

தனது உயர்கல்விக்காக அரசியலைத் தெரிவு செய்த காலம் தொட்டு, அரசியலில் அதிக ஆர்வம் ஏற்பட்டதாக சமலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :