தமிழர் உட்பட 9 பேரின் மரணதண்டனை: 72 மணித்தியாலம் கெடு

26.4.15

பாலி 9 கடத்தல்காரர்கள் வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மூன்று அவுஸ்திரேலியர்கள் உட்பட 9 பேரின்  மரண தண்டனை நிறைவேற்றுவதற்கு 72 மணிநேர கெடு விதிக்கப்பட்டு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இவர்களுக்கான மரண தண்டனை நிறைவேற்றப்படும் முறை பற்றிய தகவல்கள் அவுஸ்திரேலிய ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
அவுஸ்திரேலிய பிரஜைகளான மயூரன் சுகுமாரன் மற்றும் அன்று சான் உட்பட மரண தண்டனை நிறைவேற்றப்படும் நபர்கள் மரண தீவு எனும் இடத்துக்கு கொண்டு செல்லப்படுவர்.
அங்கு குற்றவாளியை சுற்றிலும் நிற்கும் 12 பேர் தமது துப்பாக்கியால் மரண தண்டனை கைதி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்வார்கள்.
எனினும், அந்த 12 துப்பாக்கிகளில் 3 துப்பாக்கிகளில் மாத்திரம் குண்டு காணப்படும். ஆனால் எந்தெந்த துப்பாக்கியில் குண்டு உள்ளது என்பது தொடர்பில் யாருக்கும் தெரியாது.
இந்த மூன்று குண்டுகளில் உயிரிழக்காவிட்டால் மேலதிகமாக குண்டு ஒன்று குற்றவாளியின் தலையை துளைக்கும்.

0 கருத்துக்கள் :