30 பேரின் தலையை துண்டித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்

19.4.15

லிபியாவில் 34 ஆண்டுகளாக நடந்து வந்த கடாபியின் ஆட்சி 2011 முடிவுக்கு வந்ததில் இருந்து போராட்டக்குழுக்கள் அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு செயல்பட்டு வருகின்றன. அங்கு ஆயுதம் தாங்கிய பல்வேறு தீவிரவாத குழுக்கள் செயல்பட்டு வருகிறது.


லிபியாவில் எத்தியோப்பியன் கிறிஸ்துவர்கள் 30 பேரை ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தலையை துண்டித்து சுட்டுக்கொன்றது போன்ற வீடியோவை, அந்த அமைப்பினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோவை ரெய்டர் அமைப்பால் உறுதி செய்ய முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த கொடூர சம்பவம் உலக நாடுகளை அதிர்ச்சியில் உறைய செய்துள்ளது. தீவிரவாதிகள் இதுபோன்ற படுபாதக செயலில் ஈடுபட்டிருப்பது உலக நாடுகளை கடும் அதிர்ச்சியடைய செய்து உள்ளது.

0 கருத்துக்கள் :