மஹிந்தவின் 2ஆவது அரசியல் பிரவேசம் மே 01 இல்

14.4.15

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் இரண்டாவது அரசியல் பிரவேசம் சர்வதேச தொழிலாளர் தினமான மே 01ம் திகதி இடம்பெறுமென அரசியல் வட்டாரங்களில் இருந்து செய்திகள் கசிந்துள்ளதாக சிங்களப் பத்திரிகை  ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக் ஷவை  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கும் கட்சிகளும் அமைப்புக்களும் மே 01ஆம் திகதி மே தினக் கூட்டங்களையும் ஊர்வலங்களையும் நடத்துகின்றனர். இவற்றில் மஹிந்த ராஜபக் ஷ கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

வாசு விமல் கம்மன்பில உட்பட இந்த அரசியல் முன்னணி தனது மே தினக் கூட்டத்தை கிருலப்பனை விளையாட்டுத்திடலில் நடாத்தவுள்ளது.

0 கருத்துக்கள் :