எகிப்து கிஸா பிரமிடுகளில் ஆபாச படம் எடுத்த விவகாரம் விசாரணைக்கு!!!

9.3.15

உலக அதிசியமான எகிப்தில் புகழ் பெற்ற கிஸா பிரமிடு உள்ளது. கிஸா என்று அழைக்கப்படும் இது எகிப்தின் பெரிய பிரமிடு ஆகும். தொன்மையானதும், பழமையானதுமான உலக அதிசயங்களில் ஒன்று என்று கருதப்பட்டு வருகின்றது.மேலும் காலமாற்றங்களில் சிதைவடையாமல் இந்தப் பிரமிடு இன்னமும் அப்படியே பராமரிக்கப்பட்டும் வருகின்றது.

'கிஸா' பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.

தற்கால எகிப்து தலை நகர் கைரோவின் புற பகுதியில் அமைந்துள்ள கிசா பிரமிடுகள் உலக புகழ் பெற்றவை . உலக ஏழு அதிசயங்களில் ஒன்றாக போற்றப்படும் பிரமிடுகள் மிக விந்தையான,இன்னும் முற்றிலுமாக அறிந்து கொள்ளப்படாத  மர்மங்களை  உள்ளடக்கியது. ஐநூறு அடி உயரம் கொண்ட இந்த பிரமிடுகள் இரண்டரை டன் எடையுள்ள தனி சுண்ணாம்பு பாறை கற்களால் எழுப்பப்பட்டது .

இவ்வளவு புகழ் பெற்ற பிரமிடு பகுதியில் ஆபாச வீடியோ எடுத்த விவகாரம் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளது.இது எகிப்து நாட்டவரை கோபத்துக்கு உள்ளாக்கி உள்ளது.

இந்த ஆபாச படம் ஆங்கில சப் டைட்டிலுடன் எடுத்து உள்ளனர். இதனை ரஷ்யர்கள் எடுத்து உள்ளனர். இந்த வீடியோக்கள் 3 ஆபாச இணையதளங்களில் இடம்பெற்று உள்ளது.
ஆபாச நடிகை நாட்டின் வரலாற்று சின்னமாக விளங்கும் இடங்களில் உடையில்லாமல் நடமாடி உள்ளார் அது சூட் செய்யபட்டு  உள்ளது.

இது குறித்து எகிப்து வக்கீல் ஒருவர் மூத்த போலீஸ் அதிகாரியிடம் புகார் கொடுத்து உள்ளார். மேலும் உலக பிரசித்தி பெற்ற இந்த் உலக அதிசயஇடத்தில்  24 மணிநேரமும் கண்காணிக்க கண்காணிப்பு கேமிர நிறுவப்பட வேண்டும் என கோரி உள்ளார்.

இது குறித்து கூறி உள்ள எகிப்து அமைச்சர் மம்தாக் அல்-தமடி கூறும் போது  ஆபாசபட்டத்திற்கு உரிய சில வெளிப்படையான காட்சிகள் இங்கு சட்டத்துக்கு புறம்பாக எடுக்கபட்டு உள்ளது.கிசா கல்லறைக்குள் சுற்றிபார்க்க வந்த் சில வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இத்தகைய செயலில் ஈடுபட்டு உள்ளனர். என கூறினார். தற்போது இந்த சம்பவம் தொடரபாக எகிப்து அரசு விசாரனைக்கு உத்தரவிட்டு உள்ளது.

0 கருத்துக்கள் :