அரசியலில் தமிழ், முஸ்லிம் மக்கள் சிந்தித்து செயற்பட வேண்டும்

7.3.15

எமது அர­சியல் எதிர்­காலம் தொடர்­பாக எமது, மக்­களின் மத்­தியில் பல்­வேறு கேள்­விகள், பல சந்­தே­கங்கள் உள்­ளன. நாங்கள் ஒரு தனித்­து­வ­மான மக்கள். எமது கலா­சா­ரத்தை, பண்­பாட்டை, அபி­வி­ருத்­தியை மற்றும் பொரு­ளா­தா­ரத்தை தீர்­மா­னிக்கும் வகையில் ஒரு நீதி­யான தீர்வு அமைய வேண்டும்.

 அதனை பெறு­வ­தற்கு நாம் ஒரு சுமு­க­மான பேச்­சு­வார்த்­தைக்கு தயா­ரா­க­வுள்ளோம். இவ்­வி­த­மான தீர்­வுக்கு முஸ்லிம் மக்­களும் உதவ வேண்டும் என தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் தெரி­வித்தார்.

“கேட்­காத குரல்கள்" எனும் குறுந்­தி­ரைப்­பட அங்­கு­ரார்ப்­பண நிகழ்வு திரு­கோ­ண­மலை விவே­கா­னந்­தாக்­கல்­லூ­ரியில் நடை­பெற்­றது. அதன்­போது அவர் மேற்­கண்­ட­வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் குறிப்­பி­டு­கையில், கிழக்கு மாகாண சபை சம்­பந்­த­மாக தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பை பொறுத்­த­வரை மிகவும் பக்­கு­வ­மாக நடந்­தி­ருக்­கின்றோம். 2012 ஆம் ஆண்டு தேர்தல் நடந்த போது முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு முத­ல­மைச்­சரை தரத் தயார் என்று எமது மேடை­களில் பகி­ரங்க­மாக கோரினோம். ஏனென்றால் ரவூப் ஹக்கீம் முஸ்லிம் மக்­களின் தலைவர்.

அர­சாங்­கத்­துடன் சேர்ந்து போட்­டி­யி­டாமல் வெளி­யேறி தனி­யாக போட்­டி­யிட்டார். அர­சாங்­கத்தை கடு­மை­யாக விமர்­சித்தார். அந்த அடிப்­ப­டை­யி­லேயே அவர்­க­ளோடு ஒன்­றா­கச்­சேர்ந்து ஆட்சி அமைக்க தயா­ரா­னோம். அதன் கார­ண­மா­கவே முத­ல­மைச்சர் பத­வியை அவர்­க­ளுக்கு வழங்­கவும் தயா­ரா­க­வி­ருந்தோம். தேர்தல் முடிந்த பிறகு எமக்கு 11 ஆச­னங்­களும் முஸ்லிம் காங்­கி­ர­ஸிற்கு 7 ஆச­னங்களும் கிடைத்­தன. மொத்­த­மா­க­வுள்ள ஆச­னங்கள் 37, ஐ.தே.கட்­சிக்கு 4 ஆச­னங்கள் கிடைத்­தன. ஐ.தே.கட்­சியின் தலைவர் ரணில் எங்­க­ளுக்கு ஆட்சி பொறுப்பை ஏற்­கு­மாறும் அதற்கு ஒத்­து­ழைப்பு வழங்­கு­வ­தா­கவும் கூறினார்.

எனினும் நாம் அதனை ஏற்­றுக்­கொள்­ள­வில்லை. இந்­நி­லையில் முஸ்லிம் காங்­கிரஸ் அர­சாங்­கத்­துடன் சேர்ந்து ஆட்சி அமைத்­தது. இந்­நி­லையில் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்­பட்­டதால் கிழக்கு மாகாண ஆட்சி குழம்­பி­யது. அத­னை­ய­டுத்து முஸ்லிம் காங்­கி­ர­ஸுக்கும் கூட்­ட­மைப்­புக்கும் இடையில் மீண்டும் பேச்­சு­வார்த்தை நடை­பெற்­றது.

அப்­போது நாங்கள் அவர்­க­ளுக்கு கூறினோம். எங்­க­ளுக்­குத்தான் பெரும்­பான்­மை­யுள்­ளது. நாங்கள் தான் முத­ல­மைச்­சரை எடுப்போம் என்று சொன்னோம்.அதற்கு அவர்கள் உடன்­ப­ட­வில்லை. யாரோடு வேண்டாம் என்று பிரிந்­தார்­களோ அவர்­க­ளு­டனே மீளவும் ஆட்­சி­ய­மைத்­தார்கள்.
முத­ல­மைச்சர் பத­வியை எடுத்­தார்கள். ஜனா­தி­ப­தி­யுடன் பிரிந்து போட்­டி­யிட்ட அவர்கள் மீண்டும் அவர்­க­ளுடன் இணைந்து ஆட்­சி­ய­மைத்­தார்கள். எங்­க­ளு­டனும் பேசி­னார்கள். நான் எமது மாகாண சபை உறுப்­பி­னர்­க­ளுடன் பேசச் சொன்னேன். அதில் ஏற்­பட்ட உடன்­பாட்­டி­ன­டிப்­ப­டையில் மீண்டும் அவர்­க­ளுடன் சேர்ந்தோம். அவர்­க­ளுக்கு ஆத­ரவு தந்த 07 பேர் வெ­ளி­யே­றி­னார்­கள்.

என்னை வந்து வீட்டில் சந்­தித்த வெளி­யே­றிய பிரி­வினர் உங்­க­ளுடன் சேர்ந்து ஆட்­சி­யமைக்­கத்­தயார். உங்­க­ளுக்கு முத­ல­மைச்­சரை வழங்க தயா­ரா­க­வுள்ளோம் எனச் சொன்­னார்கள். வாக்­கு­று­தியும் தந்­தார்கள். ஆனால், நாங்கள் விரும்­ப­வில்லை. எமது மாகாண சபை­யினர் கூடி­னார்கள். பழைய நிலை­மை­யைத் ­தொ­டர்­வ­தென விரும்­பி­னார்கள்.

அந்த முடிவின் அடிப்­ப­டையில் தற்­போது எமது அமைச்­சர்கள் பத­வி­யேற்­றுள்­ளார்கள். ஆகவே முஸ்லிம் மக்களும் ஒன்றை உணர்ந்து கொள்ள வேண்டும். அரசியல் ரீதியாக தமிழ் மக்களும் முஸ்லிம்களும் சிந்தித்து செயற்படும் போது இவ்விதமான குழப்பங்களுக்கும் இடம் இருக்காது. இந்தக்குழப்பங்கள் ஒரு முடிவிற்கு வர வேண்டும். அதை முஸ்லிம் மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டியது அவசியமென நான் கருதுகின்றேன் என்­றார்.

0 கருத்துக்கள் :