விபசார விடுதிக்குள் நான்கு கான்ஸ்டபிள்கள் ; முற்றுகையிடச் சென்ற பொலிஸாருக்கு அதிர்ச்சி

23.3.15

விப­சார விடு­தி­யொன்றை பொலிஸார் முற்­று­கை­யிட்­ட­போது, அவ்­வி­டு­திக்குள் நான்கு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­களும் இருந்­ததைக் கண்டு சங்­க­டத்­துக்­குள்ளான சம்­பவம் இந்­தி­யாவில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜார்கன்ட் மாநி­லத்தில் இச்­சம்­பவம் இடம்­பெற்­ற­தாக இந்­திய ஊட­கங்கள் தெரி­வித்­துள்­ளன.

மேற்கு வங்க மாநில எல்­லைக்கு அரு­கி­லுள்ள அசான்சோல் எனும் நக­ரி­லுள்ள சிவப்பு விளக்குப் பகு­தி­யொன்றை பொலிஸார் முற்­று­கை­யிட்­டனர்.

இதன்­போது நான்கு பொலிஸ் கான்ஸ்­ட­பிள்­களும் அங்கு இருந்­தமை கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.

இவர்­க­ளுடன் கொலை வழக்கில் குற்­ற­வா­ளி­யாக காணப்­பட்ட ஒரு­வரும் இருந்தமை உள்ளூர்  பொலிஸ் அதி­கா­ரிகளுக்கு பெரும் நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

மேற்­படி குற்­ற­வா­ளியை வேறொரு இடத்­துக்கு அழைத்­துச்­ செல்­வ­தற்­காக இப் ­பொலிஸ் கான்ஸ்­ட­பிள் கள் நிய­மிக்­கப்­பட்­டி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

பொலி­ஸாரின் முற்­று­கை­யின்போது மேற்­படி நபர் தப்பிச் சென்ற போதிலும் பின்னர் அவர் மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பியதாக உள்ளூர் ஊடகங்கள் தெரி வித்துள்ளன.

0 கருத்துக்கள் :