மைத்திரிபால மண்ணுக்கடியில் இருந்திருப்பார் மகிந்த வென்றிருந்தால்!!

9.3.15

 மகிந்த ராஜபக்ச கடந்த ஜனாதிபதித் தேர்தலில் வென்றிருந்தால், மைத்திரிபால சிறிசேன மண்ணில் 5 அடிக்கு கீழே இருந்திருப்பார் என கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அப்படி நடந்திருந்தால், மைத்திரிபால சிறிசேனவுக்கு உதவியவர்கள் நாட்டை விட்டோ அல்லது உயிரை விட்டோ சென்றிருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கல்வியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மைத்திரிபால சிறிசேனவை திட்டியவர்கள் இன்று அவரை தலைவர் என்கின்றனர். இவற்றை நாங்கள் பொறுமையாக பார்த்து கொண்டிருக்கின்றோம்.

தேர்தல் முறையில் மாற்றங்களை செய்வது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு பின்னர் தேசிய அரசாங்கத்தை அமைக்க வாய்ப்புள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியினர் ராஜபக்சவினரை பாதுகாக்கவில்லை. அவர்களை கட்சி பாதுகாப்பதாக குற்றம் சுமத்தப்படுகிறது. குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். எதிர்காலத்தில் அவற்றை காண முடியும்.

யாழ்ப்பாணம் மற்றும் அறுகம்பையில் நிர்மாணிக்கப்படுவது ஜனாதிபதி மாளிகையல்ல சர்வதேச மாநாட்டு மண்டபம் என கூறினாலும் அதனை ஏற்றுக்கொள்ள மக்கள் முட்டாள்கள் அல்ல.

மெகா டீல்காரர்களை தேடிப்பிடிக்க சர்வதேசத்தின் உதவி பெற்றுக்கொள்ளப்படும்.

100 நாள் வேலைத்திட்டத்தில் பலவற்றை செய்துள்ளோம். ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெள்ளை வான் கலாச்சாரம் தற்போது நாட்டில் இல்லை. தகவல் அறியும் சட்டம் விரைவில் நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் அமைச்சர் காரியவசம் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :