புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடிப்பு

29.3.15

ஐரோப்பிய ஒன்றியம், விடுதலைப்புலிகள் மீதான தடையை மீண்டும் நீடித்துள்ளதாக வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பி.பெரேரா தெரிவித்துள்ளார்.  ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றத்தின் தீர்ப்பையும் கவனத்திற்கொள்ளாது இந்த தடை நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்துக்கு கடிதம் அனுப்பி இந்த தடையை உறுதி செய்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதி பெரட்ரிக்கா மொக்ஹெரன்னியை கடந்த நவம்பர் மாதம் தொடர்பு கொண்ட பிரதமர், இந்த தடையை நீடிக்குமாறு கோரியிருந்ததாகவும் பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :