மாணவியை கடத்தி துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சாரதி கைது

19.3.15

பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் 16 வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

வெள்ளவாய பகுதியில் மேலதிக வகுப்புகளுக்கு சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த மாணவியொருவரை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய முச்சக்கரவண்டி சாரதியை வெள்ளவாய பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வெள்ளவாய பகுதியிலுள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி கற்று வரும் 16 வயது நிரம்பிய மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
மேலதிக வகுப்புக்கு சென்று முச்சக்கர வண்டியில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது குறித்த மாணவி விடுதியொன்றிற்கு கொண்டுச் செல்லப்பட்டு முச்சக்கரவண்டி சாரதியினால் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இத்தொடர்பில் மாணவியின் பெற்றோர் வெள்ளவாய பொலிஸ் நிலையத்தில் புகார் செய்யதையடுத்து விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவி வெள்ளவாய அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :