இஸ்லாத்தில் அரசியல் உட்புகும்போதே தீவிரவாதம் தோற்றுவிக்கப்படுகின்றது

6.3.15

இஸ்­லாத்தில் அர­சியல் உட்­பு­கும்­போதே தீவி­ர­வாதம் தோற்­று­விக்­கப்­ப­டு­வ­தாக குறிப்­பட்ட ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தலை­வரும் நகர அபி­வி­ருத்தி மற்றும் நீர்­வ­ழங்கல் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் இந்த யதார்த்­தத்தை புரிந்­து­கொள்­ளாது ஒட்­டு­மொத்­த­மாக இஸ்­லா­மி­யர்கள் தீவி­ர­வா­திகள் என்ற எடு­கோளை கொள்­வது பொருத்­த­மற்­றது எனவும் சுட்­டிக்­காட்­டினார்.

இலங்கை – பாகிஸ்தான் நட்­பு­ற­வுச்­சங்­கத்தின் ஏற்­பாட்டில் இலங்கை பாகிஸ்தான் நாடு­க­ளுக்­கி­டை­யி­லான வர­லாறு, பொரு­ளாதாரம், இரா­ணுவம் மற்றும் கலா­சார தொடர்­புகள் எனும் தலைப்பில் சர்­வ­தேச கருத்­த­ரங்கு கொழும்பு கல­தாரி ஹோட்­டலில் நேற்று நடை­பெற்­றது.

இக்­க­ருத்­த­ரங்கின் அங்­கு­ரார்ப்­பண வைபவத்தின்போது உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.அமைச்சர் ஹக்கீம் தொடர்ந்து கருத்து தெரி­விக்­கையில்;
இலங்­கைக்கும் பாகிஸ்­தா­னுக்­கு­மி­டை யில் நீண்ட கால உறவு இருந்து வரு­கி­றது. கல்வி, கலா­சாரம், பொரு­ளா­தாரம் என ஏரா­ள­மான துறை­களில் இரு நாடு­க­ளுக்­கு­மி­டையில் நெருங்­கிய தொடர்­புகள் காணப்­ப­டு­கின்­றன. இங்­குள்ள பாகிஸ்தான் தூது­வ­ரா­ல­யமும் சகல விதத்­திலும் ஒத்­து­ழைப்­பு­களை நல்­கு­கின்­றது. அத்­துடன் கடந்த இரு ஆண்டுக­ளாக உயர்ஸ்­தா­னி­க­ராக கட­மை­யாற்­றிய மேஜர் ஜெனரல் ஹாசீம் குரேஷி பாரி­ய­ளவில் சேவை­யாற்­றி­யுள்ளார். எமது நாட்டில் உள்நாட்டு யுத்தம் நிறை­வ­டைந்து நல்­லி­ணக்கம் கட்­டி­யெ­ழுப்பப்­பட்­டுக்­கொண்­டி­ருந்த சவா­லுக்­கு­ரிய கால­கட்­டத்தில் சிறந்ந முறையில் சேவை­யாற்­றி­யுள்ளார். அவர் இலங்­கையின் நடை­மு­றைகள் பற்றி நன்கு அறிந்து வைத்­தி­ருக்­கிறார் என்­பது விசே­ட­மா­னது.

அதே­நேரம் இலங்­கையில் முஸ்­லிம்கள் சிறு­­பான்­மை­யி­ன­ராக இருந்­த­போ­திலும் பெரும்­பான்­மை­யான பௌத்த சமூ­கத்­துடன் இணைந்து நாட்டின் சகல விட­யங்­க­ளிலும் ஒத்­து­ழைக்­கின்­றனர். மன்னர் ஆட்சிக் காலம் முதல் இன்­று­வரை முஸ்­லிம்கள் தங்­களின் தனித்­து­வத்தைப் பேணிக்­கொண்டு ஆட்­சி­யா­ளர்­க­ளோடு இணைந்து நாட்டின் அபி­வி­ருத்­தியில் பங்­கா­ளி­களா­கவே செயற்­பட்டு வரு­கின்­றனர்.
அவ்­வா­றி­ருக்­கையில் அண்­மைக்­கா­லத்தில் பௌத்த அடிப்­ப­டை­வா­தி­களால் இந்த நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் பிரி­வி­னையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. முஸ்­லிம்­களின் பாரம்­ப­ரிய கலா­சார விடயங்கள் தொடர்பில் தவ­றான புரி­தல்­களை இனங்­க­ளுக்குள் உட்­பு­குத்­து­வ­தற்­கு­ரிய பாரிய முயற்­சிகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இருப்­பினும் அந்த இலக்கை அவர்கள் பூர­ண­மாக அடை­ய­மு­டி­யாது போனது.

இஸ்லாம் என்­பது ஒன்­றுதான். அதில் வேறு­பா­டுகள் கிடை­யாது. இஸ்­லாத்தில் அர­சியல் உட்­பு­கு­வ­தனால் தான் தீவி­ர­வாதம் தோற்­று­விக்­கப்­ப­டு­கின்­றது. அதற்­காக இஸ்­லா­மி­யர்கள் அனை­வரும் தீவி­ர­வா­திகள் என்ற எடு­கோளை கொள்­வது தவ­றான புரி­த­லாகும். அவ்­வா­றான நிலைமை மாற்­றப்­ப­ட­வேண்டும். பௌத்தத்திலும் இஸ்லாமிலும் இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் முன்மாதிரிகளாகச் செயற்படும் பலர் காணப்படுகின்றார்கள்.

ஆகவே இனங்களுக்கிடையில் நல்லிணக் கத்தை ஏற்படுத்தும் செயற்பாடுகள் மேலும் முன்னெடுக்கப்படவேண்டும். அதற்கு இஸ்லாமியர்கள் தமது பூரண ஒத்துழைப்புக்களை தொடர்ந்தும் வழங்கு வார்கள் என்றார்.

0 கருத்துக்கள் :