விமானத்தை அழித்த விமானியும் , அவரது பின்னணியும்

27.3.15

பிரான்சில் விபத்துக்குள்ளான ‘ஜேர்மன்விங்ஸ்’ விமானத்தை அதன் சக விமானி வேண்டுமென்றே அழித்துள்ளதாக தகவல் வெளியாகி பரப ரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவ் விமானி தொடர்பிலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறித்த விமானியின் பெயர் என் ட்ரியஸ் லுபிட்ஸ் எனவும் அவர் தனிப்பட்ட பிரச்சினைகளால் உள ரீதியான சிக்கல்களுக்கு முகங்கொடுத்திருந்த தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
28 வயதான அவர் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாகி அதிலிருந்து மீள முடியாமல் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

லுபிட்ஸின் வீட்டை சோதனையிட்டுள்ள அதிகாரிகள் அவர் தொடர்பில் பல முக்கிய விடயங்களை கண்டுபிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது அவரது கணனி உட்பட பல பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
லுபிட்ஸின் வீட்டில் முக்கிய ஆதாரமொன்றை கண்டுபிடித்துள்ளதாகவும் அதை ஆராய்ந்து வருவதாகவும் ஆனால் இப்போதைக்கு அது என்ன என்பது தொடர்பில் தற்போது வெளிப்படுத்தப் போவதில்லையெனவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர் மன உளைச்சலால் அவதிப்பட்டு வந்த நிலையிலும் விமானத்தை செலுத்துவதற்கான தகுதியைக் கொண்டிந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

விமானியின் தாய் ஒரு பியானோ ஆசிரியை எனவும் , தந்தை ஒரு வர்த்தகர் எனவும் அவர்களிடம் தற்போது விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரியவருகின்றது.

இதேவேளை லுபிட்ஸின் நண்பர்கள் , அயலவர்கள் அவரை நல்லதொரு இளைஞரெனவும் வழமைக்கு முரணான நட த்தை எதனையும் கொண்டிருக்கவில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :