கோத்தபாய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேறத் தடை

9.3.15

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தடையினை நீதிமன்றம் விதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை முன்னாள் கடற்படை தளபதி சோமதிலக திஸாநாயக்கவிற்கும் வெளிநாடுக்கு பயணம் மேற்கொள்ள நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.

காலி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியம் தொடர்பான விசாரணைகளின்போதே, நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

இந்த மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்திலிருந்த ஆயுதங்களும் பாதுகாப்பு அமைச்சின் கீழ் இயங்கிய இன்னொரு பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுதங்களும் முன்னர் மகிந்த ராஜபக்ச அரசாங்க காலத்தில் அச்சுறுத்தும் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரான கோத்தபாய ராஜபக்ஷ இந்தக் குற்றச்சாட்டுக்களை மறுக்கின்றார்.

0 கருத்துக்கள் :