யாழில் இளைஞன் தற்கொலை

22.3.15

அதிகளவான நித்திரை மாத்திரைகளை உட்கொண்ட இளைஞர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார். வடலியடைப்பு பண்டத்தரிப்பைச் சேர்ந்த சபாரத்தினம் கணநாத் (வயது23) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தனது மரணம் தொடர்பில் சுயமாக கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு மனவிரக்தியில் அதிகளவில் நித்திரை மாத்திரைகளை உட்கொண்டு உயிரிழந்துள்ளதாக விசாரணையின் போது உறவினர்கள் தெரிவித்துள்ளனர். காதல் தோல்வியே இதற்கு காரணம் எனத் தெரியவருகின்றது.
இம்மரணம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.

0 கருத்துக்கள் :