முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசத்திற்கு தடை

2.3.15

முகத்தை முழுமையாக மூடி  தலைக்கவசம் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய இம்மாதம் 21 ஆம்  திகதி முதல் தடை செய்யப்படவுள்ளது. எனவே நாட்டில் எதிர்வரும்  காலத்தில் முகத்தை மறைத்துக் கொண்டு பயணிப்பவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

அத்துடன் முகத்தை மூடி தலைக்கவசம் அணிந்து கொண்டு மோட்டார் சைக்கிளில் வந்து பல்வேறு குற்றச்செயல்பகளில் பலர் ஈடுபடுகின்றனர். இவ்வாறான சம்பவங்கள்  அதிகரித்து வருவதனாலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது  என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துக்கள் :