தமிழ் மொழியில் தேசிய கீதமா: அனுமதிக்க முடியாது!!

19.3.15

தேசிய கீதத்தை தமிழ்மொழியில் பாடுவது தொடர்பில் சட்டபூர்வ உரிமை நாடு முழுக்க அமலாக்கும் விதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டிருப்பதானது புதிய அரசின் 100 நாள் வேலை திட்டத்தின் உள்ளடக்கப்படாதொன்று.

 என தெரிவிக்கும் மேல்மாகாண சபை உறுப்பினரும் தூய்மையான ஹெல உறுமையின் தலைவருமான உதயன் கம்பன்பில எமது நாட்டின் அரச தேசிய நிகழ்வுகளில் ஒரு போதும் தமிழ் மொழியில் தேசிய கீதத்தை பாடுவதற்கு ஒரு போதும் அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்தார்.

தூய்மையான ஹெல உறுமய அமைப்பினரின் ஊடகவியலாளர் சந்திப்பு மேல் மாகாண அழகியற் கலையரங்குகளில் நடைபெற்றது. இதன் போது கருத்து தெரிவிக்கையிலேயே உதய கம்பன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :