வவுனியாவில் யுவதியின் சடலம் மீட்பு

17.3.15

வவுனியா பட்டைக்காடு பகுதியில் கிணற்றிலிருந்து யுவதியொருவரின் சடலத்தை காலை (17) வவுனியா பொலிஸார் மீட்டனர். குணரட்ணம் லக்சிகா என்ற 18 வயது யுவதியின் சடலமே அவரது வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் காணாமல் போயிருந்த இவர், சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவ இடத்திற்கு வருகை தந்த திடீர் மரண விசாரணை அதிகாரி சிவநாதன் கிசோர், சடலத்தைப் பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டதுடன், பிரேத பரிசோதனைக்காக சடலத்தை பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு பணித்தார்.

0 கருத்துக்கள் :