தமிழில் வணக்கம் தெரிவித்து மோடி உரை

14.3.15

யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இளவாலை வடமேற்கு பகுதியில் அமைக்கப்பட்ட இந்திய வீட்டு திட்டத்தை சனிக்கிழமை (14) பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வில் உரையாற்றும் போது தமிழில் வணக்கம் தெரிவித்தே தொடங்கினார்.

இலங்கைக்கு இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திரமோடி, இன்று யாழ்ப்பாணத்துக்கான விஜயத்தை மேற்கொண்டார்.
யாழ். பொது நூலகத்தில் கலாசார மண்டபத்துக்கான ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டதை தொடர்ந்து, கீரிமலை பகுதியான இளவாலை வடமேற்கு பிரதேசத்தில் இந்திய வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட 10 வீடுகளை உரிமையாளர்களிடம் கையளித்தார்.

இந்திய பிரதமர் தனது உரையின் ஆரம்பத்தில் ஊடகவியலாளர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதியில் இருந்து மேடைக்கு அருகில் வந்து ஊடகவியலாளர்களை அமருமாறும் நான் மக்களை பார்வையிட வேண்டும்;  என கூறி தமிழில் வணக்கம் தெரிவித்து உரையினைத் தொடங்கினார்.

இந்நிகழ்வினை அடுத்து நகுலேஸ்வர ஆலயத்திற்குச் சென்று மோடி, வழிபாட்டில் ஈடுபட்டார்.
இந்நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், வடமாகாண அமைச்சர்கள், உறுப்பினர்கள், யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

0 கருத்துக்கள் :