மனைவி, மகள்களை உயிருடன் எரித்துக்கொன்ற பொறியாளர்

11.3.15

மத்தியப் பிரதேசத்தில் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களை பொறியாளர் ஒருவர் உயிருடன் எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


பெட்டல் மாவட்டத்தில் அரசு பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் பொறியாளராக பணியாற்றும் 39 வயதான அந்த நபர், காவல்நிலையத்தில் தானாக முன்வந்து சரண் அடைந்தார். போலீசாரிடம் தான் அளித்த வாக்குமூலத்தில், தனக்கும் தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுக்கும் எய்ட்ஸ் நோய் இருப்பது அண்மையில் தெரிய வந்தது.

 இதனால் விரத்தி அடைந்த தானும், மனைவியும் முதலில் குழந்தைகளை கொன்றுவிட்டு பின்னர் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தோம். அதன்படி தனது சொந்த ஊரான அமராவதிக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு திரும்புகையில், கார் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றோம். திடீரென தனது மனைவி மனம் மாறியதால் காரில் இருந்து வெளியேறியதாகவும், ஆனால் அவர்களை காப்பாற்ற முடியவில்லை என்று கூறியுள்ளார்.


இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்மந்தப்பட்ட அந்த பொறியாளரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர் கூறுவது உண்மையா என்று கண்டறிய அவருக்கு மீண்டும் எச்ஐவி பரிசோதனை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

0 கருத்துக்கள் :