நெஞ்சைப் பதற வைக்கும் இராணுவத்தின் புதிய போர்க் குற்றம்! – (வீடியோ இணைப்பு)

10.3.15

இறுதி யுத்தம் என்ற பெயரில் இருண்டது வன்னிப் பெருநிலப்பரப்பு. அந்த வன்னியில் நடந்தது என்ன என்பது கொஞ்சம் கொஞ்சமாக ஆதாரங்களுடன் வெளிவர, தமிழினத்துக்கு இலங்கை அரச படையால் நிகழ்த்தப்பட்ட அட்டூழியங்கள் நெஞ்சை பதற வைத்துள்ளன.

அந்த வகையில் அண்மையில் சில போர்க் குற்ற ஆதாரப் புகைப்படங்கள் வெளிவந்த அதேநேரம், தற்போது புதிய புதிய காணொளிகளும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.ltte_poralikal01-
நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவுக்கு அங்கு அரங்கேற்றப்பட்ட தமிழினப் படுகொலை தமிழினத்தை மட்டுமல்ல தற்போது சர்வதேசத்தையே அதிர வைத்துள்ளது எனலாம்.
அந்தளவுக்கு தமிழினம் மீது இலங்கைப் படைகளால் மனித இனம் செய்ய முடியாத ஒரு ஈனச் செயல்களை செய்து முடித்துள்ளது.
எது எவ்வாறாயினும் நடந்து முடிந்த அத்தனை துன்ப துயரங்களுக்கும் நீதி கேட்டு நிற்கும் தமிழினத்துக்கு சர்வதேசமே நீதி வழங்க வேண்டும் என்பது கட்டாயமான தீர்ப்பாகும்.

0 கருத்துக்கள் :