எமது கிராமங்களும் ஒளிபெறுமா?; காத்திருக்கும் மக்கள் ஏமாற்றம்

1.3.15

கிளிநொச்சி  இராமநாதபுரம், மாவடி, புதுக்காடு ஆகிய கிராமங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு இதுவரை மின்சார வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

இதனால் இங்கு வாழும் சுமார் 430 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சி  கரைச்சி பிரதேச செயலக பிரிவின் கீழ் உள்ள இக்கிராமங்களில் கடந்த 2010, 2011ஆம் ஆண்;டுகளில் மக்கள் மீள்குடியேறினர். மீள்குடியேற்றம் ஐந்து வருடங்களாகும் நிலையில் இன்று வரை மின்சார வசதிகள்; ஏற்படுத்தப்படவில்லை.
இக்கிராமங்களுக்கு மின் இணைப்பு வழங்கப்படும் என முன்னர் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை அடுத்து கிராம மக்கள் தமது வீடுகளுக்கான மின் இணைப்பு வேலைகளை மேற்கொண்டனர்.
ஆனால் வருடங்கள் கடந்து செல்கின்றபோதும் மின் இணைப்பு வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவில்லை.
எமது கிராமங்களை அண்டிய பகுதிகளுக்கு மின்சார வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள் ளன. ஆனால் எமது கிராமங்கள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளன என இப்பகுதி மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பாக இலங்கை மின்சார சபையின் கிளிநொச்சி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டு கேட்டபோது, குறித்த கிராமங்களுக்கு மின்சார வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்று வருவதாகத் தெரிவித்தனர்.

0 கருத்துக்கள் :