மனைவியின் திருமண ஆடையை கழற்ற முடியாததால் முதலிரவில் மனைவியை கொடூரமாக தாக்கிய கணவன்

19.2.15

பிரிட்டனை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது திருமண நாளின் முதல் இரவில் மனைவியின் திருமண ஆடையை கழற்ற தன்னால் முடியாததால் ஆத்திரமடைந்து மனைவியை தாக்கியதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

கெவின் கோலிக்டி எனும் 29 வயதான இளைஞர்  தனது பால்ய பருவகால காதலியான எமி டோசன் ௨௨ எனும் யுவதியை திருமணம் செய்துள்ளார்.

திருமணத்துக்கு முன்னரே இவர்கள் இணைந்து வாழ்ந்து ஒரு குழந்தைக்கு பெற்றோராகியிருந்தனர்.

இவர்கள் உத்தியோகபூர்வமாக திருமணம் செய்த தினத்தில் விருந்து வைபவம் நிறைவுற்ற பின்னர் தமது அறைக்கு சென்றபோது தனது திருமண ஆடையை கழற்ற உதவுமாறு கணவர் கெவிடனிடம் எமி டோசன் கோரியுள்ளார்.

அவருக்கு உதவ கெவின் முயற்சித்தபோதிலும் ஆடையை கழற்ற அவரால் முடியவில்லை. அதனால் அவர் ஆத்திரமடைந்து தனது மனைவியை தூக்கி எறிந்துவிட்டு பின்னர் கடுமையாக தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.

இத்தாக்குதல்களினால் எமி டோசனின் புருவம், முகம், மார்பில் காயங்கள் ஏற்பட்டுள்ளன. அன்று தான் இறந்துவிடக்கூடும் என அஞ்சியதாக எமி டோசன் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :