ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்துக்கு இந்தியாவில் தடை

26.2.15

ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு ஈராக், சிரியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் கொடூர தாக்குதல்களை அரங்கேற்றி வருகிறது. இந்த அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள், தங்களை எதிர்த்து போரிடும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த அப்பாவி மக்களை பணயக்கைதிகளாக பிடித்து சென்று படுகொலை செய்து வருகின்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட இந்த இயக்கம், ஐ.நா. சபை அட்டவணைப்படி இந்தியாவிலும் தடை செய்யப்பட்டு உள்ளதாக கடந்த டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் அறிவித்தார். தற்போது இந்த அமைப்பு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடை செய்யப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இஸ்லாமிக் ஸ்டேட் அல்லது இஸ்லாமிக் ஸ்டேட் ஆப் ஈராக் போன்ற இயக்கங்களுடன் இணைந்த இயக்கங்கள், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் தடை செய்யப்படுகிறது என்று கூறப்பட்டு உள்ளது.

0 கருத்துக்கள் :