கூட்டத்துக்கு செல்லமாட்டேன்: மஹிந்த!!

19.2.15

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி நுகேகொடையில் இன்று பொதுக் கூட்டமொன்று நடைபெறவுள்ள நிலையில், தான் அந்த கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

 அவருக்கு நெருக்கமான சிலரிடமே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

 அந்த நெருக்கமானவர்களிடம் தொடர்ந்தும் இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள மஹிந்த ராஜபக்ஷ, 'செயற்பாட்டு ரீதியான அரசியலுக்கு மீண்டும் வரும் எண்ணம் தனக்கில்லை எனவும் தனது புதல்வரான நாமல் ராஜபக்ஷவின் எதிர்கால அரசியல் முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாகவும்' கூறியுள்ளார் என அந்த செய்திகளில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

0 கருத்துக்கள் :