இவ்வருடத்தில் கவனயீனம் காரணமாக ஏழு சிறார்கள் மரணம் : பெற்றோர், பாதுகாவலர் மீது சட்டம் பாயும் என்கிறது பொலிஸ்

19.2.15

2015 ஜனவரி மாதம் முதல் நேற்று வரை பெற்றோரின் கவவனயீனத்தால் ஏழு சிறார்கள் உயிரிழந்துள்ளதாகவும் இனிமேல் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமல் உயிரிழப்புக்கு காரணமா கும் பெற்றோர் அல்லது பாதுகாவலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென பொலிஸ் தலைமையகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக கடந்த சில நாட்களாக ஒரு வயது முதல் 5 வயதுக்கிடையிலான ஏழு சிறுவர், சிறுமியர் பெற்றோரின் கவனயீனம் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

குறிப்பாக வெள்ளவத்தை ஹெவ்லொக் சிட்டி சொகுசுமாடி வீட்டுத் தொகுதியில் மாடியிலிருந்து வீழ்ந்து சிறுமியொருவர் உயிரிழந்தமை அங்குருவாதோட்ட பிரதேசத்தில் களுகங்கையில் வீழ்ந்து சிறுமியொருவர் உயிரிழந்ததை சுட்டிக் காட்டலாமெனவும் பொலிஸ் தலைமையகம் சுட்டிக் காட்டியுள்ளது.

0 கருத்துக்கள் :