நரேந்திரமோடியை சீற்றம் கொள்ளவைத்த சிலை விவகாரம்

12.2.15

குஜராத் ராஜ்கோட்டில் பிரதமர் நரேந்திரமோடிக்கு கோவில் கட்டப்பட்டு, அங்கே சிலை நிறுவப்பட்டிருந்தது.  மோடி இதற்கு கண்டனம் தெரிவித்ததால் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து மோடி சிலையை கோவிலில் இருந்து அகற்றினர்.


குஜராத் மாநிலம், ராஜ்கோட் அருகே உள்ள கொத்தாடியா என்ற கிராமத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு கட்டப்பட்ட கோயிலில் பாரத மாதா மற்றும் நரேந்திர மோடியின் உருவப்படம் வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வந்தது.


இந்த நிலையில் ஒரு லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட நரேந்திர மோடியின் மார்பளவு சிலை, கடந்த ஞாயிற்றுக்கிழமை இக்கோயிலில் வைக்கப்பட்டது. இந்த சிலைக்கு காலை மற்றும் மாலையில் தீபாராதணை காட்டப்பட்டு பூஜைகளும் நடத்தப்பட்டு வந்தன.


இது தொடர்பாக டிவிட்டர் இணையத்தில் கருத்து தெரிவித்த நரேந்திர மோடி, தனக்கு கோயில் கட்டப்பட்டிருப்பதாக வெளியான தகவல் தன்னை திடுக்கிட வைத்துள்ளது என்று  கூறினார். மேலும், அதிர்ச்சி அளிக்கும் இந்த செயல் இந்தியாவின் பாரம்பரியத்திற்கு எதிரானது. கோயில் கட்டும் நடவடிக்கைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும். கோயில் கட்டுவதற்கான நேரம் மற்றும் பணத்தை தூய்மை இந்தியா திட்டத்திற்கு செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


இதையடுத்து அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை எடுத்து, கோவில் கட்டுவதை தடுத்து நிறுத்தினர்.  சிலையை கோவிலில் இருந்து அகற்றினர்.

0 கருத்துக்கள் :