மைத்திரி - மோடி சந்திப்பு 45 நிமிடங்கள் நடைபெறும்

12.2.15

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு எதிர்வரும் 16 ஆம் திகதி புதுடில்லியில் இடம்பெறவுள்ளது.
இந்தச் சந்திப்பு 45 நிமிடங்கள் இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முதலாவது வெளிநாட்டு விஜயத்திற்காக ஜனாதிபதி தலைமையிலான குழு எதிர்வரும் 15 ஆம் திகதி இந்தியா செல்லவுள்ளது.

இப்பயணத்தின் போது சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, வெளியுறவுத்துறை அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோர்  ஜனாதிபதியுடன் செல்லவுள்ளனர்.

0 கருத்துக்கள் :