கிழக்கு மாகாண முதலமைச்சராக தமிழர் வரவேண்டும்:கலையரசன்

19.1.15

கிழக்கு மாகாண முதலமைச்சராக வருபவர் தமிழராக இருக்கவேண்டும் என்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைமைகள் உறுதியாக இருப்பதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் தெரிவித்துள்ளார்.

மேலும் கிழக்கு மாகாணசபையில் 11 உறுப்பினர்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு முதலமைச்சரை கேட்பது நியாயமானது. ஆனால் 7 உறுப்பினர்களை கொண்ட முஸ்லிம் காங்கிஸ் முதலமைச்சரை கேட்பது எந்த விதத்தில் நியாயமானது என கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஆலையடிவேம்பு கலாசார மண்டபத்தில் ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் க.இரத்தினவேல் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் கலந்துகொண்டு உரையாற்றுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்

ஜனாதிபதி தேர்தலில் மாற்றம் பெற்றவுடன் கிழக்கு மாகாணசபையை தமிழர்கள் ஆளக்கூடிய சாதாரண நிலமை ஏற்பட்டிருக்கின்றது 2012 ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாண சபை தேர்தலில் த.தே.கூட்டமைப்பு 11 உறுப்பினர்களையும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிஸ் பெற்றிருந்தது அந்த காலகட்டத்தில் த.தே.கூ. தலைவர் சம்மந்தன் முஸ்லிம் காங்கிரஸ்சிடம் அழைப்பு விடுத்திருந்தார்.

 நாங்கள் தமிழ்பேசுகின்ற சிறுபான்மை சமூகங்களாக இருக்கின்ற இரு சமூகங்களும் இணைந்து கிழக்கு மாகாண ஆட்சி அதிகாரங்களை பிடிக்கவேண்டும் என்ற கருத்தினைக் கூறியிருந்தார்
இதில் முதலமைச்சராக முஸ்லிம் இந்தால் பரவாயில்லை எனவும் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் முஸ்லிம் காங்கிரசுக்கு கொடுத்து மாகாண சபையை அமைக்கவேண்டும் என்கின்ற முயற்சியிலே பல முன்னெடுப்புக்களை முன்னெடுத்திருந்தார்.

இவ்வாறான விடயங்களுக்கு முஸ்லிம் காங்கிரஸ் செவிசாய்க்காமல் சுய இலாபங்களுக்காக அரசோடு ஒட்டிக்கொண்டு இந்த மாகாண சபையில் பெரும்பான்மையினரான ஒரு அமைச்சரை தவிர முதலமைச்சும் மற்றும் அமைச்சுக்களை முஸ்லிம் காங்கிரஸ் வசமாகியது அப்பொழுது திட்டமிட்டு தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டார்கள் அதேவேளை வழங்கப்பட்ட எந்த நியமனங்களாக இருந்தாலும் நேரடியாகவும் சமூக ரீதியாகவும் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த விடயத்தில் நாங்கள் தமிழர்கள் பாதிக்கப்பட்டிருந்தோம் பல விடயங்களை மாகாண சபையில் பிரஸ்தாபிக்கப்பட்ட பொழுது நியாயங்கள் மறுதலிக்கப்பட்டன ஒவ்வொரு விடயங்களிலும் நியாயங்கள் மேலோங்காமல் அநீதிகள் தான் இடம்பெற்றிருந்தன.

ஆனால் இந்த மாற்றத்தின் பிறகு தற்போது த.தே.கூட்டமைப்பு ஆட்சி அமைக்கக்கூடிய சூழல் இருக்கின்ற இந்த காலகட்டத்தில் இப்பொழுது முஸ்லிம் காங்கிரஸ் கூறுகின்றார்கள்.

 கிழக்கு மாகாண சபை முதலமைச்சராக முஸ்லிம் வரவேண்டும் என ஆனால் தமிழர்கள் முதலமைச்சராக இருக்கவேண்டும் என எமது தலைமைகள் அதிலே உறுதிகாக இருக்கின்றார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

0 கருத்துக்கள் :