குடும்பத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ரணிலிடம் கோரிக்கை விடுத்த மகிந்த

11.1.15

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியான இறுதிக்கட்டத்தில் வெள்ளிக்கிழமை அதிகாலை மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்கவை அலரிமாளிகைக்கு வரவழைத்து தனக்கும், சகோதரர்கள் இருவருக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வேண்டு கோள்விடுத்ததாக மைத்திரிபால சிறிசேனவின்  ஊடகப் பேச்சாளரான டாக்டர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார்.

அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்களைப்  பற்றி சிறிதும் சிந்திக்காமல் தனது குடும்பத்தின் பாதுகாப்பு பற்றியே மகிந்த ராஜபக்ஷ பேசினார் எனவும் ராஜித சேனாரத்ன செய்தியாளர்கள் மத்தியில் தெரிவித்தார்.

முக்கியமாக கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குமாறு மகிந்த ராஜபக்ஷ கோரியதாகவும் ராஜித தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ஷவுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படும். அதேபோன்று பாதுகாப்பை எதிர்பார்க்கும் சகலருக்கும்  தேவைக்கேற்ப அரசு பாதுகாப்பு வழங்கும்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோத்தாபய ராஜபக்ஷ மீது பல்வேறு குற்றச்சாட்டுக்கள் உள்ளன.
அவை குறித்து பூரண விசாரணை முன்னெடுக்கப்படும். குற்றமிழைத்தவர்கள் யாராக இருப்பினும் தராதரம்பாராது உரிய விசாரணை முன்னெடுக்கப்பட்டு தண்டிக்கப்படுவர்.

0 கருத்துக்கள் :