தபால் வாக்குகளில் மைத்திரி பால சிறிசேனா முன்னிலை!

8.1.15

இலங்கை அதிபர் தேர்தல் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் ராஜபக்சே மீண்டும் அதிபராக போட்டியிட்டார். எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக மைத்திரி பால சிறிசேனா போட்டியிட்டார். வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிக்கு முடிவடைந்தது.


யாழ் மாவட்டத்தில் 59, வவுனியா 70 , கம்பஹா 60, நுவரெலியா 70, மாத்தளை 72, கொழும்பு 76, அனுராதபுரம் 76, முல்லைத்தீவு 68, திரிகோணமலை 60 சதவீதம் வாக்குகள் பதிவானது.


இரவு 7 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது. மைத்திரி பால சிறிசேனா 8,270 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். ராஜபக்சே 3,746 வாக்குகள் பெற்றுள்ளார்.


தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடைபெறும். நள்ளிரவில் முன்னிலை நிலவரம் தெரியவரும். அதிகாலையில் முழு வெற்றி நிலவரம் தெரிய வரும்.

0 கருத்துக்கள் :