ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் : பிரதமர் ரணில்

18.1.15

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ஐ.நா விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயாரென, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றிற்கு பிரதமர் ரணில் இவ்விடயத்தை தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த, இந்தியா மற்றும் சீனாவிற்கு இடையில் முறுகலை தோற்றுவிக்க முயன்றதாக குறிப்பிட்டுள்ள ரணில், தற்போதைய அரசாங்கம் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நட்புறவை பேணுமென கூறியுள்ளார்.

மேலும், சீனாவுடன் இலங்கை மேற்கொண்டுள்ள ஒப்பந்தங்களை மீள்பரிசீலணை செய்யவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தமிழர் பகுதிகளுக்கு சுயாட்சி வழங்குவதில் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துதல், கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :