காத்தான்குடியில் மீண்டும் கைக்குண்டு தாக்குதல்

4.1.15

காத்தான்குடி நகரசபை உறுப்பினர் சல்மா அமீர் ஹம்சாவின் வீட்டின் மீது இன்று அதிகாலை கைக்குண்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.
 
இதனால் அவரின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 
இது தொடர்பாக காத்தான்குடி பொலிசார் விசாரணைகளை நடாத்தி வருவதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.
 
சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தலைமையிலான பொலிசார், விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெற்றோலினால் தயாரிக்கப்பட்ட கைக்குண்டே வீசப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.வெதகெதர தெரிவித்தார்.
 
மேற்படி சல்மா ஹம்சா கர்தான்குடி நகர சபையின் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் உறுப்பினராக இருந்து வருவதுடன் பெண்களுக்கான வலுவூட்டலுக்கும் அபிவிருத்திக்குமான அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளராக இருந்து பெண் செயற்பாட்டாளராகவும் மனிதநேய செயற்பாட்டாளராகவும் செயற்பட்டு வருகின்றார்.
 
இதேவேளை நேற்று சனிக்கிழமை அதிகாலை காத்தான்குடியில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூகின் வீட்டு உட்பட நான்கு பேரின் வீடுகளுக்கு கைக்குண்டுகள் வீசப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :