நாட்டு மக்களுடன் இணைந்து செயற்பட தயார்: ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

9.1.15

நாட்டு மக்களுடன் இணைந்து நாட்டினை கட்டியெழுப்புவதற்கு தாம் தயாராகவுள்ளதாக புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு சுதந்திர சதுர்கத்தில் உயர் நீதிமன்ற நீதியரசர் கே.ஸ்ரீபவன் முன்னிலையில் சற்று முன்னர் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இதன்போது அவர் அங்கு இவ்வாறு கருத்து தெரிவித்திருந்தார்,
எனக்கு வாக்களித்து என்னை வெற்றி பெறச் செய்த அனைத்து மக்களுக்கும் நான் நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். அத்துடன், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் அரச ஊடகங்கள் நடந்து கொண்ட முறையானது மிகவும் மோசமானதாக காணப்பட்டது.

அரச ஊடகங்கள் இவ்வாறு பக்கச்சார்பான முறையில் நடப்பதனை ஒரு போதும் என்னால் அனுமதிக்க முடியாது.

மேலும், ஜனாதிபதி தேர்தலுக்கான பிரச்சார நடவடிக்கைகள் இடம்பெற்ற காலப்பகுதியில் என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டமையானது எனது மனதில் ஆராத வடுவாக பதிந்துள்ளது.

இந்த நிலையில், நாட்டு மக்களுடன் இணைந்து நாட்டினை கட்டியெழுப்புவதற்கு நான் தயாராகவுள்ளேன். என தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :