புதிய அரசிடமிருந்து எமக்குஅழைப்பில்லை ; சம்பந்தன்

11.1.15

தேசிய அரசியலில் இணைவதற்கு புதிய அரசு தமிழ் தேசியக் கூட்டமைப்பினராகிய எமக்கு அழைப்பு விடுக்கவில்லை என தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

நாளை அமைச்சர்கள் 60 பேர் பதவியேற்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏம்.ஏ.சுமந்திரனுக்கு  மொழிகள், சமூக ஒன்றிணைவு, மீள்குடியேற்றம் மற்றும் சமாதானத்துக்கான அமைச்சர் பதவி  வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும்,  தேசிய அரசு அமைக்கப்படுகின்றது என்ற தகவலோ அல்லது அதில் இணையும் படியான அழைப்பே புதிய அரசிடமிருந்து  எமக்கு கிடைக்கவில்லை .
  அதனால்  அரசில் இணைவதா, அமைச்சுப் பதவியை ஏற்பதா என்பன குறித்து ஆராய வேண்டிய தேவையும் எமக்கு ஏற்படவில்லை  என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :