புதிய தூதுவர் நல்லூரானைத் தரிசிப்பு

11.1.15

யாழ். இந்திய துணைத்தூதரகத்தின் புதிய தூதுவர் ஏ.நடராஜன் நேற்று நல்லூரானிடம் குடும்பத்தினருடன் சென்று வழிபாடுகளை மேற்கொண்டுள்ளார்.

யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு புதிய தூதுவராக நடராஜன் கடந்த 5ஆம் திகதி பதவியேற்றார்.

இந்தநிலையில் புதிய இந்திய தூதுவர் நடராஜன் தனது குடும்பத்துடன் நல்லூர்  ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளை மேற்கொண்டார்.

யாழ்.இந்திய துணைத்தூதரத்தின் தூதராக கடமையாற்றிய வி.மகாலிங்கம் கடந்த ஆண்டு நடுப்பகுதியில் மாற்றலாகிச் சென்றார். இதனால் அவரது இடம் நீண்ட நாட்களாக வெற்றிடமாக இருந்து வந்தது.

எனினும் இதுவரை காலமும் தூதரகத்தின் பதில் தூதுவராக தட்சணாமூர்த்தி தூதரக கடமைகளை செயற்படுத்தி வந்தார்.

இந்த நிலையில் கண்டியிலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் தூதுவராக இருந்த ஏ. நடராஜன் கடந்த 5ஆம் திகதி முதல் புதிய தூதுவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

0 கருத்துக்கள் :