மைத்திரிக்கு மோடி வாழ்த்து

9.1.15

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் முடிவுகளின் படி பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன முன்னிலை வகிக்கின்றார்.

இந்தநிலையில் மைத்திரியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைதியான முறையிலும் ஜனநாயகமான தேர்தலை நடாத்த ஒத்துழைப்பு வழங்கிய மக்களுக்கும் வாழ்த்துக்களை மோடி தெரிவித்துள்ளார்.

இதேவேளை, மக்களின் தீர்ப்பினை ஏற்று எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டதுடன்  அலரிமாளிகையில் இருந்தும் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :