நடிகர் அஜீத்துக்கு கொலை மிரட்டல்

29.1.15

நடிகர் அஜீத் நடித்துள்ள என்னை அறிந்தால் வரும் பிப்ரவரி 5ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று தயாரிப்பு நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதனையடுத்து அஜீத் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி யடைந்தனர். 

இந்நிலையில் சென்னையில் உள்ள உதயம் திரையரங்கிற்கு நேற்று ஒரு மர்ம கடிதம் வந்தது. திரையரங்கு மேலாளர் அரிகரன் கடிதத்தை படித்து பார்த்தார். அதில் வரும் 5ம் தேதி என்னை அறிந்தால் ரிலீஸ் ஆகும் அன்று உதயம் தியேட்டர் உள்பட 8 திரையரங்குகளில் வெடிகுண்டு வெடிக்கும் என்று கூறப்பட்டிருந்தது.

 மேலும், அஜீத்தின் உயிருக்கும் ஆபத்து என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனைக்கண்ட அரிகரன் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக குமரன் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆய்வாளர் விஸ்வநாத் ஜெயின் உள்ளிட்ட போலீஸார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். வெடிகுண்டு  சோதனையும் நடத்தினர். ஆனால் உதயம் திரையரங்கில் வெடிகுண்டுகள் எதுவும் இல்லை.

இந்நிலையில் அந்த மிரட்டல் கடிதத்தை அனுப்பியவர் யார் என்பது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். என்னை அறிந்தால் படத்திற்கு இடையூறு ஏற்படுத்துவதற்காக யாரோ திட்டமிட்டு இதனை செய்திருக்ககூடும் என்று போலீஸார் கருதுகின்றனர். இந்நிலையில் மொட்டை கடிதத்தை அனுப்பிய மர்ம ஆசாமியை போலீஸார் தேடிவருகின்றனர்.

0 கருத்துக்கள் :