மஹிந்த ராஜபக்ச இந்து மதத்தை சேர்ந்தவர்: பா.ஜ.க ராஜா பரபரப்பு பேச்சு

5.1.15

இந்திய அரசியல் சட்டப்படி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்து மதத்தைச் சேர்ந்தவர் என பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழக மீனவர்கள் இலங்கை கடல் எல்லைக்குள் மீன்பிடிக்க செல்லக்கூடாது. ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு மத்திய அரசு உரிய உதவி செய்யும். இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளனர். இலங்கை சிறைகளில் தற்போது தமிழகத்தை சேர்ந்த ஒரு மீனவர் கூட இல்லை.

இந்திய அரசியல் சட்டப்படி இலங்கை அதிபர் ராஜபக்சே இந்து மத்தை சேர்ந்தவர். ராஜீவ் காந்தி கொலைக்கு காரணமான பிரபாகரனுக்கு பிறந்த நாள் கொண்டாடுவதும், காந்தியை கொலை செய்த கோட்சேவுக்கு சிலை அமைப்பதும் இரண்டுமே கண்டிக்கத்தக்கது.

ஜிகாதி பயங்கரவாதிகளை காட்டிலும், கம்யூனிஸ்ட்கள் மோசமான காட்டுமிராண்டிகள். அவர்கள் சித்தாந்த ரீதியாக விவாதிக்க முன்வரவேண்டும்” என்றார்.

0 கருத்துக்கள் :