மஹிந்த வரவில்லை..!

16.1.15

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமை பொறுப்பை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிப்பதாக தெரிவித்திருந்த மஹிந்த ராஜபக்ஷ சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்டத்திற்கு வருகைத்தரவில்லை. எனினும் அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷ வருகைத் தந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
 
 
ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைவராக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ சற்றுமுன்னர் நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பில் தற்போது இடம்­பெ­றும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியின் மத்­திய குழுக் கூட்­டத்­தின்­போதே கட்­சியின் தலைவர் பதவி உத்­தி­யோ­க­பூர்­வ­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கைய­ளிக்­கப்­பட்டுள்ளது. கட்சியின் தலைவராக யார் இருப்பது தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கும் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க் ஷ­வுக்கும் இடை­யி­லான தனிப்­பட்ட சந்­திப்பு ஒன்று நேற்று முன்­தினம் இரவு சபா­நா­யகர் இல்­லத்தில் நடை­பெற்­றது. இந்த சந்­திப்­பின்­போது மஹிந்த ராஜ­பக் ஷ தலைமைப் பத­வியை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பா­ல­வுக்கு விட்­டுக்­கொ­டுக்க தயா­ர் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :