நீங்கள் யார்?- சொத்துக் குவிப்பு வழக்கில் சு.சுவாமியிடம் நீதிபதி கேள்வி

5.1.15

சொத்துக் குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு விசாரணையில் தன்னையும் இணைத்துக் கொள்ளுமாறு சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்தார். அதற்கு நீதிபதி குமாரசாமி, "நீங்கள் யார்? வழக்கிற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?" என கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து, தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட சுப்பிரமணியன் சுவாமி, "இந்த வழக்கில் முதன்முதலில் புகார் தெரிவித்தது நானே. ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்கும் முன்னர் உச்ச நீதிமன்றம் என் கருத்தையும் கேட்டது. எனவே என்னை இந்த வழக்கு விசாரணையில் இணைத்துக் கொள்ள வேண்டும்" என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையில் உங்களுக்கு உள்ள இணைப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவு நகல் எங்கே என கேட்டார். நகலை எடுத்துவரவில்லை என சு.சுவாமி கூறினார். சம்பந்தப்பட்ட உத்தரவு நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த பிறகு மனுவை பரிசீலிப்பதாக நீதிபதி கூறினார்.

0 கருத்துக்கள் :