மைத்திரியா மகிந்தவா? சூடு பிடிக்கும் தேர்தல் ஆடுகளம்!

4.1.15

ஆட்சி மாற்றம் ஒன்­றுக்கே பெரி­யண்­ணன்மார் கடந்த ஐந்து வரு­டங்­க­ளாகப் பாடு­ப­டு­கி­றார்கள் என்று சொன்னால், இது சிவப்புச் சிந்­த­னையின் வெளிப்­பாடு என்று உதறிச் சென்­ற­வர்கள் இப்­போது அது குறித்து ஆராயத் தொடங்­கி­விட்­டார்கள்.

ஜன­வரி 8 ற்­குப்­ பின்னர், மார்ச் மற்றும் செப்­டெம்பர் காலத்து ஐ.நா.கூட்­டத்­தொ­டரை ஒட்­டிய இந்­து­ ச­முத்­தி­ரப்­ பி­ராந்­திய பூகோள அர­சியல், எவ்­வாறு மாற்­ற­ம­டையும் என்­பது குறித்துப் பார்க்­கலாம்.
அதா­வது மேற்­கு­ல­க -­இந்­திய 'பார்வை' பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யா­கினால், மலாக்கா நீரி­ணைக்குள் சீனாவின் புதிய மூலோ­பா­யத்­திட்டம் முடங்கி, யென் நாண­யத்தின் பெறு­ம­தியைச் செயற்­கை­யாக(?) இறக்­கிக்­கொண்­டி­ருக்கும் -ஆசி யாக் QE (quantitative easing) இன் முதன்­மை­யா­ள­ராகக் கரு­தப்­படும் ஜப்­பானின் மீள்­வ­ருகை இலங்­கையில் சாத்­தி­யப்­ப­டுமா என்­பது பற்றி பேசலாம்.

அது­மட்­டு­மல்ல, கிழக்கு நோக்­கிய கொள்­கை யில் (Look East Policy) வியட்­நா­மோடும் ஜப்­பா­னோடும் சேர்ந்து தென்­சீனக் கடலில் இந்­தியா நடாத்தும் 'சீனத்­த­டுப்பு அரங்க நிகழ்வு', இந்­து ­சமுத்­திரப் பிராந்­தி­யத்தில் மாலை­தீ­வோடு இணைந்து நிக­ழக்­கூ­டிய வாய்ப்பு குறித்தும் ஆரா­யலாம்.
8ம் திக­தி­யன்று நடை­பெ­ற­வுள்ள தேர்தல் குறித்து இப்­போது பார்ப்போம்.

பொது­வா­கவே, அன்­றாட அர­சியல் நிகழ்வு குறித்து அதிக அக்­கறை காட்டி, எதிர்கால வேலைத்­திட்­ட­மற்றுச் செய­லாற்றும் கட்­சிகள் தொடர்­பா­கத்தான் எப்போதும் கவனம் செலுத்­தப்­ப­டு­கி­றது.
மனச்­சாட்சி, புறக்­க­ணிப்பு போன்ற சொல்­லா­டல்­களைப் பயன்­ப­டுத்தும் கட்­சி­களின் நிலையும் இதுதான்.
இலங்­கையைப் பொறுத்­த­வரை, ஒரு கட்சி அர­சியல் நடை­பெ­று­வது போல் தெரி­கி­றது. அதா­வது பிர­தான வேட்­பா­ளர்கள் இரு­வரும் ஒரு கட்­சியின் நீண்­ட­கால உறுப்­பி­னர்கள். இங்கு குடும்பம் இரண்­டாகப் பிளந்து அதி­கார மோதல் ஏற்­பட்­டுள்­ள­தெ­னலாம். அப்­பி­ள­வினுள் மாதுளை முத்­துக்­க­ளையும், பலா­ச்­சு­ளை­க­ளையும் சில அறி­ஞர்கள் தேடு­கின்­றார்கள்.

ஒரு­பக்கம், வேட்­பா­ளரின் குடும்­பமும் சில தனிப்­பட்ட ஆத­ர­வா­ளர்­களும், எதிர்­வீட்டு செய­லா­ளரும், சேனாக்­களும் களத்தில் நிற்­கின்­றார்கள். அத்­தோடு சிறு­பான்மை இனக்­கட்­சி­க­ளோடு இணைந்து நாட்­டைப்­பி­ரிக்க மைத்­திரி அணி திட்டம் போடு­கி­ற­தென பேரி­ன­வாதப் போர்­வாள்கள் கூச்­ச­லி­டு­கின்­றன.
மறு­பக்கம், குடும்ப போர்த்­த­ள­ப­தியும், ஓய்­வு­பெற்ற முன்னாள் குடும்­பத்­த­லை­வியும், எதிர்­வீட்டுத் தலை­வரும், நேற்­று­ வரை அரை­மந்­திரி - முழு­மந்­தி­ரி­யாக இருந்­த­வர்­களும், குடும்பம் உடை­யமுன் வீட்­டுக்குள் மட்­டு­மல்ல ஊர் பூரா­கவும் இன­வாத தூபம் போட்ட உறு­மயக் காவி­களும் சேர்ந்­தி­ருக்­கி­றார்கள்.
போர்க்­குற்ற விசா­ர­ணையை மஹிந்த மீதோ அல்­லது இரா­ணு­வத்தின் மீதோ எவர் நடத்த முன்வந்­தாலும், அதனை எக்­கா­ரணம் கொண்டும் அனு­ம­தியோம் என சவால் விடுத்­துள்­ளது இந்த அணி என்­பது குறிப்­பி­டத்­தக்­ கது.
மூன்­றா­வது தரப்­பாக இட­து­சாரி அணி­யொன்று போட்­டிக்­க­ளத்தில் இறங்­கி­யுள்­ளது. தமிழ் மக்­களின் பிரிந்து செல்லும் சுய­நிர்­ணய உரி­மையை ஏற்­றுக்­கொண்டு போட்­டி­யிடும் அவ்­வ­ணிக்கு தமிழ் கட்­சி­க­ளி­ட­மி­ருந்து ஆத­ரவு கிடைக்­க­வில்லை.
இந்­த­நி­லையில், பெருந்­தே­சிய இன­வாதக் கட்­சி­க­ளி­ட­மி­ருந்து இவ்­வ­ணிக்கு ஆத­ரவு கிடைக்­கு­மென்­பது பகலில் கனவு காண்­ப­தற்கு ஒப்­பாகும்.
இங்கு போட்டி என்­ன­வென்றால், 50 சத­வீ­தத்­திற்கும் சற்று அதி­க­மாக யார் வாக்­கினைப் பெறு­வது என்­ப­துதான். அதா­வது தேர்தல் ஆணை­யா­ளரைப் பொறுத்­த­வரை, வெற்­றி­மாலை சூட தசம் ஒரு­வீதம் கூடு­த­லாக இருந்­தாலே போதும்.
ஏனெனில் வெகு­ஜன மக்­களின் ஜன­நா­ய­க­மா­னது, சத­வீ­தத்தில் தங்­கி­யி­ருக்கும் அர­சியல் கட்­ட­மைப்­பினைக் கொண்ட ஜனநா­யகம் நாடு இது.
அதே­வேளை தமிழ் பேசும் மக்­களின் வாக்­கு­களே வெற்­றியைத் தீர்­மா­னிக்கும் சக்­தி­யாக, சத­வீ­தங்­களை நிரப்பும் மென்­சக்­தி­யா­கவோ அல்­லது குறுஞ்­சக்­தி­யா­கவோ இருக்­கு­மென சில தமிழ் அர­சியல் தலை­வர்கள் நம்­பு­கி­றார்கள்.
இத் தேர்தல் குறித்து தமிழ் பேசும் மக்­க­ளிடம் இரண்­டு­பட்ட நிலை கிடை­யாது.
போட்­டி­யிடும் 19 பேரில் எவர் வந்­தாலும் நிலைமை மாறாது என்­ப­துதான் தமிழ் மக்­களின் சலிப்­பான முடிவு. தற்­போ­தைய ஆட்­சி­ய­தி­காரம் அகற்­றப்­பட வேண்­டு­மென்­கிற உள்­ளார்ந்த விருப்பு, அதன் 10 வரு­ட­கால ஆட்சி மீதான வெறுப்பு இவர்­க­ளிடம் நிறைந்து காணப்­ப­டு­கி­றது.
புரை­யோ­டிப்­ போ­யி­ருக்கும் தங்­களின் அவல வாழ்வு குறித்து, சிறி­சே­னாவின் தேர்தல் அறிக்கை சிறி­த­ள­வி­லா­வது பேசு­மென எதிர்­பார்த்த சில­ருக்கு ஏமாற்­றமே எஞ்­சி­யது.
வடக்கில் மாகா­ண­சபை நிறு­வப்­பட்டால் நல்­லி­ணக்கம் வரு­மென்று எதிர்­பார்த்த அதே வெளிச்சக்­திகள், தற்­போது ஆட்சி மாற்­ற­மொன்று ஏற்­பட்டால் இலங்கை முழு­வதும் சமா­தான சக­வாழ்வு, நல்­லி­ணக்­க­மெல்லாம் மீண்டும் நிலை­நாட்­டப்­ப­டு­மென்று எம்மை நம்பவைக்க முயற்­சிப்­ப­துதான் வேடிக்­கை­யான கவ­லை­ தரும் விட­ய­மாக இருக்­கி­றது.
அதே­வேளை ஐ.நா.வின் விசா­ர­ணைக்கு மஹிந்த அரசு ஒத்­து­ழைப்பு வழங்­கா­விட்டால், இலங்கை மீது பொரு­ளா­தாரத் தடை­யினை அமெ­ரிக்கா தலை­மை­யிலான மேற்கு அணி கொண்­டு­வ­ரு­மென இப்­போதும் சிலர் நம்­பிக்­கொண்­டி­ருக்­கி­றார்கள்.
தற்­போ­தைய தேர்­தலில் தோல்­வி­யுற்று, இன்னும் இரண்டு வரு­டத்­திற்கு நானே ஆட்­சியில் இருப்­பே­னென அடம்­பி­டித்தால் அல்­லது ஜனா­தி­பதி, இரா­ணுவ கூட்டு ஆட்சி அமைக்­கப்­பட்டால் மட்­டுமே, பொருண்­மிய நெருக்­க­டியை மேற்­கு­லகம் பிர­யோ­கிக்க ஆரம்­பிக்கும்.
மேற்­கு­லகோ அல்­லது இந்­தி­யாவோ, 'சிறு­பான்­மை­யாக வாழும் தேசிய இனங்­க­ளுக்­கு­ரிய உரி­மையை நீங்கள் வழங்­கா­விட்டால் இரு­த­ரப்பு பொரு­ளா­தார உறவினை நிறுத்­துவோம்' என திபெத் விவ­கா­ரத்தை முன்­வைத்து சீனா­வி­டமும் சொல்­வ­தில்லை, தேசிய இனங்­களைப் பர­வ­லாக ஒடுக்கும் மியன்­மா­ரையும் (பர்மா) அச்­சு­றுத்­து­வ­தில்லை.
மாறாக, பொரு­ளா­தார உற­வினை மேம்­ப­டுத்­தும்­ வண்ணம், நட்புப் பய­ணங்­க­ளையே அந்­நாட்டுத் தலை­வர்கள் அதி­க­மாக மேற்­கொள்­கின்­றார்கள்.
இந்த யதார்த்­தத்­தைப்­ பு­ரிந்து கொள்­ளாமல், பூகோள அர­சியல் எமக்குச் சாத­க­மாக மாறு­கி­ற­தென மேம்­போக்­காகச் சொல்­லி­விட்டுச் செல்ல முடி­யாது. ஆசி­யப்­ பி­ராந்­தி­யத்தில் இவ்­வல்­ல­ர­சுகள் மேற்­கொள்ளும் காய்­ந­கர்த்­தல்கள், எமக்கும் பொருந்­தி­வ­ரக்­கூ­டிய அம்­சங்­களை உள்­ள­டக்­கி­யுள்­ளது.
ஒரு பிராந்­தி­யத்தை உள்­ள­டக்­கி­ய­தா­கவே, இவர்­களின் அர­சியல் இரா­ணுவ மூலோ­பாயத் திட்டம் வகுக்­கப்­படும். தனியே இலங்­கையை மட்டும் வைத்து இவை வகுக்­கப்­பட மாட்­டாது.
சர்­வ­தேச விசா­ர­ணைக்கு எதி­ராக இரா­ஜ­தந்­தி­ரப் ­போ­ரினை நடத்­தப் ­போ­வ­தாக, வீடு­வீ­டாகச் சென்று பிர­சாரம் செய்­கிறார் மைத்­திரி அணியில் இருக்கும் ஹெல உறு­ம­யவின் சம்­பிக்க ரண­வக்க என்­கிற செய்தி வரு­கி­றது.
'தன்­னைத்­ தூக்­கி­லிட மேற்­கு­லகம் முயற்சி செய்­கி­றது' என்ற மஹிந்­தாவின் பரப்­பு­ரையை பல­மி­ழக்கச் செய்ய, ஜாதிக ஹெல உறு­ம­யவை ரணில், சந்­தி­ரிகா, மைத்­திரி கூட்டு கள­மி­றக்கி விட்­டுள்­ளது போலி­ருக்­கி­றது.
இந்­திய அரசின் சுப்­பி­ர­ம­ணிய சுவாமி பாத்­தி­ரத்தை, மைத்­திரி அணியின் சம்­பிக்க சிர­மேற்­கொண்டு செயற்­ப­டு­கின்றார். அங்கு புலி எதிர்ப்பு. இங்கு அமெ­ரிக்க ஏகா­தி­பத்­திய எதிர்ப்பு. பெரிய வேறு­பா­டில்லை.
இந்த இலட்­ச­ணத்தில் நல்­லாட்­சியும், நல்­லி­ணக்­கமும் உரு­வாக ஆட்­சி­மாற்றம் ஒன்றே பொருத்­த­மா­னது என்­கிற முடி­விற்கு வெளிச்­சக்­திகள் வந்­தி­ருக்­கின்­றன. தேர்தல் ஒழுங்­காக நடக்­குமா? இரா­ணுவ அதி­காரம் நெருக்­க­டி­களை உரு­வாக்­கமா? என்­பது குறித்தே அனைத்­து­லக நெருக்­கடி குழு (ICG) போன்­றவை கவ­லைப்­ப­டு­கின்­றன.
ஆட்சி மாற்­றத்­திற்கு தடைகள் ஏற்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­ப­தி­லேயே அவர்கள் கவ­ன­மாக இருக்­கி­றார்கள்.
தமிழர் தரப்பு ஆத­ரவு வழங்­கி­னாலோ அல்­லது அவர்­களின் ஆத­ர­வினைப் பகி­ரங்­க­மாக கோரி­னாலோ, எதிர்த்­த­ரப்­பிற்கு சிங்­கள ஜன­தாவ ( மக்கள்) சாய்ந்­து­விடும் என்­கிற பயம் இரு தரப்­பிற்கும் இருக்­கி­றது.
நான்கு சுவர்­க­ளுக்குள் இர­க­சி­ய­மாகப் பேசி ஆத­ர­வினைப் பெற்­றாலும், தமிழ் கட்­சிகள் பகி­ரங்­க­மாக அந்த ஆத­ர­வினைத் தெரி­வித்து விடக்­கூ­டாது என்­ப­திலும் ஜாக்­கி­ர­தை­யாக இருக்­கி­றார்கள்.
இருப்­பினும் முஸ்லிம் காங்­கிரஸ் தனது ஆத­ர­வினை பகி­ரங்­க­மா­கவே எதி­ரணிக் கூட்­டுக்கு அறி­வித்து விட்­டது. அறி­வித்தல் வெளி­யா­ன­வுடன் கிழக்­கெங்கும் முஸ்லிம் மக்கள் சீன­வெடி(?) கொளுத்தி தமது விருப்­பினைத் தெரி­வித்­தி­ருக்­கி­றார்கள்.
பஷிலோடு உறவு வைத்­தி­ருந்தோர் முகங்கள் மட்டும் வாடி­யி­ருந்­ததை ஒளிப்­ப­டங்கள் வெளிப்­ப­டுத்­தின.
இவை­த­விர, மைத்­திரி வென்றால் சில­வே­ளை­களில், முஸ்லிம் காங்­கிரஸ், ஐ.தே.க.என்­பன கூட்­ட­மைப்­போடு இணைந்து கிழக்கு மாகாண சபை ஆட்­சியைப் பிடிக்­கலாம் என்­கிற எதிர்­பார்ப்பும் சில­ரிடம் உள்­ளது.
அதே­வேளை சிறையில் இருக்கும் அர­சியல் கைதி­களின் விடு­தலை, இரா­ணுவம் ஆக்­கி­ர­மித்த நிலங்­களை மீளப்­பெ­றுதல், சொந்த இடத்தில் மீள்­கு­டி­யேற்றம், இன அழிப்பு தொடர்­பான சர்­வ­தேச சுயா­தீன விசா­ரணை மற்றும் நிரந்­த­ர­மான அர­சியல் தீர்வு போன்ற முக்­கிய விவ­கா­ரங்கள் குறித்து தமிழர் தரப்பு பேச­ முற்­ப­டும்­ போது, ஆளையாள் கைநீட்­டிக்­ காட்டித் தப்­பித்துச் செல்லும் விளை­யாட்டில், சந்­தி­ரிகா,  ரணில் தரப்பு ஈடு­ப­டு­வ­தாக கூட்­ட­ மைப்பின் முக்­கி­யஸ்தர் ஒருவர் கவலை தெரி­வித்தார்.
ஈழத்­த­மி­ழி­னத்தின் அர­சியல் விவ­காரம் குறித்து பகி­ரங்­க­மா­கவோ அல்­லது வெளிப்­ப­டை­யா­கவோ பேச, இந்த எதிரணி பின்னடிக்கும் போது, எவ்வாறு இனங்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்க முடியுமென்று புரியவில்லை.
அந்த அளவிற்கு சிங்கள மக்கள் மத்தியில், பெருந்தேசிய இனவாதத்தினை பெரும் விருட்சமாக பலயாக்களும், உறுமயக்களும் வளர்த்துள்ளன. சர்வதேசத்தின் ஆதரவு தேவையாயின், அவர்களின் ஆட்சி மாற்ற விருப்பத்தைப் பூர்த்தி செய்ய வேண்டுமென்பதே கூட்டமைப்பின் நிலைப்பாடாக இருப்பது போல் தெரிகிறது.
அதற்கு ஏற்றவாறு கூட்டமைப்பின் தலைமை மைத்திரிக்கு ஆதரவளிக்குமாறு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பிரசாரத்தினை முன்னெடுக்க தலைவர்களும் தளபதிகளும் ஏற்கனவே களத்தில் இறங்கிவிட்டதாக களச் செய்திகள் கூறுகின்றன. சம்பந்தர் அவர்களின் நிலைப்பாட்டினை ஆதரித்து உணர்ச்சிக் கவிதைகளும் வெளிவரத் தொடங்கியுள்ளன.
தமிழர் தரப்பானது, அதிபர் தேர்தலில் ஒரு தரப்பிற்கு 'நிபந்தனையற்ற' ஆதரவினை வழங்குவது இதுதான் முதற்தடவை.
இது எவ்வாறு இருப்பினும், சீன சார்பு போய் மேற்குலக சார்பு அரசு அமைக்கப்பட்டாலும், தமிழ் பேசும் இனத்தின் பிரச்சினை தீர்க்கப்படுமா என்கிற சந்தேகம் மட்டும் மாறாமல் இருக்கும்.
இத­யச்­சந்­திரன்

0 கருத்துக்கள் :