மஹிந்தவுக்கு ஆதரவாக சுவரொட்டி ஒட்டியவர் மீது வாள்வெட்டு

5.1.15

யாழ். கோப்பாய் மத்தி பகுதியில் வைத்து இனந்தெரியாத நபர்களின் வாள்வெட்டுக்கு இலக்காகிய ஒருவர் வலது கையில் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் திங்கட்கிழமை (05) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 அதேயிடத்தை சேர்ந்த ஏ.சந்திரகுமார் (வயது 38) என்பவரே படுகாயமடைந்தார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான சுவரொட்டி ஒட்டிக்கொண்டிருந்த போதே இவர் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

 இது தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

0 கருத்துக்கள் :