அமெரிக்காவுக்கு தப்பிச் சென்ற ராஜபக்சே தம்பியை கைது செய்ய தீவிரம்

19.1.15

ஜனாதிபதி தேர்தலில் தோல்வி அடைந்த ராஜபக்சேயும், அவரது தம்பிகளும் பதவியை பயன்படுத்தி செய்த அட்டூழியங்கள் ஒவ்வொன்றாக வெளியில் வரத் தொடங்கியுள்ளன.
குறிப்பாக ராஜபக்சேயின் மகன்கள் கற்பழிப்பு மற்றும் கொலை குற்றங்களில் ஈடுபட்டதாக பல்வேறு கட்சியினரும் புகார்கள் கூறியுள்ளனர்.

ராஜபக்சே குடும்பத்தினர் மீது பல ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டுக்களும், எழுந்துள்ளது. எனவே ராஜபக்சே குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் எந்த நேரத்திலும் கைது செய்யப்படுவார்கள் என்று கூறப்படுகிறது.

இதனால் ராஜபக்சேயின் தம்பிகள் கோத்தபய, மற்றும் பசில் இருவரும் வெளிநாட்டுக்கு தப்பி ஓட்டம் பிடித்தனர். பசில் ராஜபக்சே கடந்த 11–ந்தேதி தன் மனைவியுடன் அமெரிக்கா சென்று விட்டார்.
கொழும்பு காட்டு நாயக்க விமான நிலைய அதிகாரிகள் செய்த உதவியால் பசில் ராஜபக்சே எளிதில் தப்ப முடிந்தது. மற்ற பயணிகளுடன் செல்லாமல் அவர் வி.ஐ.பி.க்கள் செல்லும் பாதை வழியாக சென்று அமெரிக்காவுக்கு தப்பி விட்டார்.

அமெரிக்கா சென்று சேர்ந்ததும் அவர், சுதந்திரா கட்சி தேசிய அமைப்பாளர் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பினார். அதன் பிறகே பசில் ராஜபக்சேக்கு 3 அதிகாரிகள் உதவி செய்திருப்பது தெரிந்தது.

இதையடுத்து பசில் ராஜபக்சே சட்ட விரோதமான முறையில் நாட்டில் இருந்து தப்பியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

0 கருத்துக்கள் :