காலி துறைமுக கப்பலில் இருந்து பெருமளவு ஆயுதங்கள் கண்டுபிடிப்பு

18.1.15

காலி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த “மகாநுவர நவுக்காகவ” என்ற இலங்கை கப்பலில் இருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று ஞாயிற்றுக்கிழமை பகல் இந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கப்பலில் இருந்து சுமார் 12 கொள்கலன்களில் அடைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
எனினும் இது யாருக்காக? கொண்டு வரப்பட்ட ஆயுதங்கள் என்ற விபரங்கள் தெரியவரவில்லை.
சம்பவம் தொடர்பில் இரண்டுபேரை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

0 கருத்துக்கள் :