இராணுவம் வெளியேற்றப்பட மாட்டாது, உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்பட மாட்டாது : இராணுவப்பேச்சாளர்

10.1.15

மீண்டும் இலங்கையில், புலிப்பயங்கரவாதம் தலைதூக்கவுள்ளதான செயற்பாடுகள் இடம்பெறுவது போன்ற செய்திகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது.

அவ்வாறான செய்திகள் எவற்றிலும் உண்மையில்லை என இராணுவப்பேச்சாளர் ருவான் வணிகசூரிய தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் முதலாவது செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
குறித்த செய்தியாளர் மாநாட்டில் அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

“மீண்டும் புலிப்பயங்கரவாதம் தலைதூக்கவுள்ளதாக செயற்பாடுகள் இடம்பெறுவதாக பேஸ்புக், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பப்படுகின்றன. அவ்வாறான செய்திகளில் உண்மை எதுவும் இல்லை.

அது மாத்திரம் அன்றி வடக்கிலிருந்து இராணுவத்தினர் வெளியேற்றப்படவுள்ளதாகவும், உயர் பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகிக் கொண்டு இருக்கின்றன.
இவ்வாறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம். நாம் வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றவோ, உயர்பாதுகாப்பு வலயங்களை நீக்கவும் மாட்டோம்.

இந்த நாட்டில் மீண்டும் ஒரு பயங்கரவாதம் உருவாவதற்கு இடமளிக்க மாட்டோம்” என்றார்.

0 கருத்துக்கள் :