கே.பி.யை கைது செய்யுங்கள் நீதிமன்றில் விரைவில் மனு

18.1.15

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தர்களில் ஒருவரான கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை கைது செய்ய உத்தரவிடுமாறு வலியுறுத்தி மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளது.
  இதன்படி நாளை திங்கட்கிழமை அந்த மனுவை தாக்கல் செய்யவுள்ளதாக ஜே.வி.பி. பிரசார செயலாளர் விஜித ஹேரத் எம்.பி. தெரிவித்துள்ளார்.  இது தொடர்பாக விஜித ஹேரத் எம்.பி. மேலும் தெரிவித்துள்ளதாவது  ;
  விடுதலைப் புலிகள் அமைப்பின் முக்கியஸ்தராக இருந்துள்ள அவர் அக்காலப் பகுதியில் செயற்பட்டவிதம் மற்றும் அவரிடமுள்ள சொத்துக்கள் தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இதனால் அவரைக் கைது செய்து இந்த விடயங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு வலியுறுத்தப்படவுள்ளது 

0 கருத்துக்கள் :