ராஜபக்ச இளவரசர்கள் பாலியல் வன்புணர்ச்சி உட்பட பல குற்றங்களில் ஈடுபட்டனர்!– ஜாதிக ஹெல உறுமய

11.1.15

குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டமை தொடர்பாக ராஜபக்ச இளவரசர்களுக்கு எதிராக எதிர்வரும் மாதங்களில் தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

ராஜபக்ச இளவரசர்களான நாமல், யோஷித்த, ரோஹித்த ஆகியோர் இளம் பெண்களை பாலியல் வன்புணர்ச்சிக்கும் மற்றும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியமை உட்பட பல விடயங்கள் சம்பந்தமான தகவல்கள் தமக்கு கிடைத்துள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
மூத்த இளவரசரான நாமல் ராஜபக்ச தலைமையிலான நீலப்படையணி நாட்டில் மாற்று படையாக செயற்பட்டது.
நீலப்படையணியின் செயற்பாடுகள் தொடர்பில் அடுத்த வாரங்களில் சட்டநடவடிக்கை எடுக்கப்படும்.
ராஜபக்ச இளவரசர்களினால் பாலில் வன்புணர்ச்சிக்கும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்ட எண்ணிலடங்காத இளம் பெண்கள் பற்றிய தகவல்களும் சாட்சியங்களும் எமக்கு கிடைத்துள்ளன.

இவர்களின் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளான சில யுவதிகளுக்கு பல்வேறு இராஜதந்திர பதவிகள் வழங்கப்பட்டு சமாதானப்படுத்தபட்டுள்ளனர்.

ராஜபக்ச இளவரசர்களின் குற்றச் செயல்கள் குறித்து நாங்கள் பல தகவல்களை திரட்டி வரும் அதேவேளை மேலதிக தகவல்களை மக்களிடம் இருந்து எதிர்பார்கின்றோம் எனவும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துக்கள் :