ராஜபக்ஷவிற்கு சுப்பிரமணியன் சுவாமிஆறுதல்

9.1.15

இலங்கை ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது முறையாக போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ஷ தோல்வியடைந்துள்ளார்.

இதனையடுத்து ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷ தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல என்று பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

தமிழர்கள் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்கள் மற்றும் சிங்களர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் தெற்கு பகுதியிலும் சிறிசேனவுக்கு தான் அதிக வாக்குகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டர் வலைத்தளத்தில், தேர்தலில் ராஜபக்ஷ தோல்வி அடைந்தது வரலாறு காணாதது அல்ல. இரண்டாம் உலகப் போரில் இங்கிலாந்து வெற்றி பெற காரணமாக இருந்த சர்ச்சிலும், இந்தியாவில் அதிசயம் நிகழ்த்திய பிவிஎன் ஆகியோரும் தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் என்று தெரிவித்துள்ளார்.

சர்ச்சில் இரண்டாவது உலகப் போரில் இங்கிலாந்தின் வெற்றிக்கு வழிவகுத்தவர். பி.வி. நரசிம்மராவ் இந்தியாவில் பொருளாதார மறுமலர்ச்சியை ஏற்படுத்தினார்.

இதேபோலவே ராஜபக்ஷவும் தேர்தலில் தோல்வியைச் சந்தித்துள்ளதாக சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாழும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் ராஜபக்ஷ மோசமான தோல்வியைத் தழுவியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துக்கள் :