நீதிமன்றில் நீதி கேட்கும் சந்திரிகா

5.1.15

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் தன்னை மஹிந்த ராஜபக்ச  அவமானபடுத்தி பேசியமைக்காக நீதிமன்றம் செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக குமாரதுங்க இன்று எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனை தான் மிஸ்டர் என ஆண் என பாலின ரீதியாக  பிரித்து காட்டவே கூறினேன். இதனை ஆளும் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தவறாக பிரசாரத்தில் தெரிவித்து தன்னை அவமானபடுத்துகிறார்.
 இதற்கு எதிராக தேர்தல் முடிந்து ஒன்பதாம் திகதி நீதிமன்றம் செல்லவுள்ளேன்  என தெரிவித்தார்.

0 கருத்துக்கள் :