பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் அரசு கூட்டமைப்புக்கு உறுதி

12.1.15

இனப்பிரச்சனை,கைதிகள் விடுதலை ,காணி அபகரிப்பு ,மற்றும் தமிழர் பகுதிகளில் காணப்படும் பிரச்சனைகள் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் புதிய அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை ஓன்று இடம்பெற்றுள்ளது . 

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் புதிய ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரச தரப்புக்குமிடையில் இன்று மதியம்  சுமார் ஒன்றரை  மணி நேரம் இப்  பேச்சுவார்த்தை இடம்பெற்றுள்ளது. 

இச்சந்திப்பில் இனப்பிரச்சினை , மீள்குடியேற்றம்  மற்றும் கைதிகளின் விடுதலை ,வடமாகாண சபை இயங்குவதற்கு உள்ள தடைகள் என பல விடயங்கள் கூட்டமைப்பினரால் முன்வைக்கப்பட்டது .

இவற்றை கேட்டுக்கொண்ட அரச தரப்பினர் , இவ்விடயங்கள் தொடர்பில் உரிய தீர்வை பெற்று தருவதாகவும் இனப்பிரச்சினைக்குத் தீர்வொன்றை முன்வைப்பது தொடர்பில் ஆராய குழுவொன்று அமைக்கப்படுமெனவும்  அரசியல்கைதிகளின் விவகாரத்தை கவனத்தில் எடுப்பதாகவும்   வாக்குறுதி அளித்துள்ளனர். 

0 கருத்துக்கள் :